Friday, December 1, 2023

அவன் - அவள் - அது A Short Story by S.Jagannath

 


அவன்:  அந்தக் காலனிக்கு பணி நிமித்தம் மாற்றலாகி புதியதாக குடிவந்த யுவன். 


அவள்:  கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு செல்ல பெற்றோர் தடா போட்டதால், எல்லா டி வி சீரியலும் பார்த்து, நம் வாழ்க்கையிலும் ஒரு த்ரில் வேண்டும் என்று ஒவ்வொரு சீரியல் கதாநாயகிகளின் சேட்டைகளை அப்பா இல்லாத நேரத்தில் கண்ணாடி முன் ரிஹர்ஸல்  பார்த்துக் கொண்டு, நடிப்பு வராமல் அவதி படும் யுவதி. 


அது:  ஒரு நாய். கவுண்டமணி சொல்லியது போல் அதற்கு நாய் என்றுதான் பெயர். இன்னும் அக்கம்பக்கத்தில் வேண்டாதவர்கள் யாரும் இல்லாததால், நாய்க்கு பெயர் வைக்க சந்தர்ப்பம் வர வில்லை.


யுவதியின் தந்தை ஹிட்லர் ரகம். பெருத்த தேகம். கருத்த உருவம். அமாவாசை இருட்டில் இவர் சிரித்தால் மட்டுமே ஆள் இருப்பது தெரியும்.  தாய் சுமார் ரகம். தான் உண்டு, தன் டிவி சீரியல் உண்டு என்று காலத்தை தள்ளும் சராசரி அம்மா.


யுவனின் பெற்றோர், அவனைப் பெற்றவுடன்  கடமை முடிந்ததென்று பூவுலகை விட்டு மேலுலகம் சென்று விட்டனர். யுவன் சுய முயற்சியில் முன்னேறிய சாதுர்யன். இன்று வரை, நாயர் கடை வடை, டீ, பன் என்று நாஸ்தாவை முடித்து, மதியம், அலுவலகத்தில் சக ஊழியர்களின் உணவை பங்கு போட்டு, இரவில் ரோட்டு கடை டிபன் என்று சிக்கன வாழ்வில் வாழ்பவன். உணவில் தான் சிக்கனம் உடையில் இல்லை. அதனாலேயே இவனை சுற்றி ஒரு கோபியர் கூட்டம் வலம் வரும். "பார்வை ஒன்று போதுமே", "பார்த்தால் பசி தீரும்" என்று எந்த வலையிலும் சிக்காமல் வெறும் பார்வையிலேயே காலத்தை ஓட்டும் கவலையில்லா யுவன். 


மாலை நேரங்களில் காலனியில், ஷூ, டீ ஷர்ட், ட்ராக்ஸ் சகிதம் நடை பயிற்சி என்று வலம் வரும் போது, ஏதேச்சையாக கண்ணில் சிக்கியவள் யுவதி. 


சற்று பொறுங்கள். காமதேவன் ரொம்ப பிஸி. எல். டி. ஸி. யில் லீவில் சென்றதால், அரியர்ஸ் வேலை ஜாஸ்தி. காமேஸ்வரனிடம் பர்ஃபாமன்ஸ் ரெவ்யூவில் சிக்கி, ப்ரமோஷன், இன்க்ரிமென்ட் , போனஸ் கட்டாகாமல் இருக்க வேண்டுமென்றால், டபுள் ஷிஃப்ட் வேலை செய்து முடிக்க வேண்டும். இதற்கு நடுவில் காமேஸ்வரன், ஒரு நாளைக்கு இருபது தடவையாவது. "காமு கம் ஹியர்",  "காமு கம் ஹியர்" என்று கூப்பிட்டு உப்புசப்பில்லாத ஜோக்கை சொல்லி, அவரே டேபிள் சேர் எல்லாம் அதிரும்படி  சிரிப்பார். அவர் ஜோக்கை கேட்டு சிரிக்க வில்லையென்றால், பர்ஃபாமன்ஸ் ரெவ்யுவில் ஏ, பி என்ன சி கூட கிடைக்காது. டி போட்டு டீலில் விட்டுவிடுவார். சரி, சரி, நம்ம வேலைய பார்ப்போம்னு, காமதேவன் ஸிஸ்டம் ஓபன் பண்ணி, லவ் ஜோடி மெனுவில் உள்ள லேடஸ்ட் என்டீரீஸ பாத்ததுல சிக்கியது, நம்ம யுவனும் யுவதியும். அப்புறமென்ன. யுவனும் யுவதியும் லவ்வோ லவ்வு. டாவோ டாவு. தாங்க்ஸ்  டு காமதேவன். 


யுவனின் மாலை நேர நடை பயிற்சி, காலை, மாலை என்று இரண்டு நேரமாக மாறியது. எல்லாம் காமதேவன் உபயம். ஆனால், அதில் ஒரு சிக்கல். ஆம், அது அந்த நாய் தான். யுவனைக் கண்டவுடன் குறைக்கும். ஏற்கனவே தனக்குன்னு ஒரு ஜோடி தேட முடியாம செயின் போட்டு கட்டி வைத்ததில் செம கடுப்பு. சும்மா விடுமா அது. யுவனைக் கண்டால் குறைக்கும். பாம்பறியும் பாம்பின கால். யுவனும் அதுக்கு சளைத்தவனில்லை. 


டீக்கடை நாயர் காலாவதியான பிஸ்கட்ட தூக்கி குப்பைல போட வச்சிருந்தத, யுவன் ஒரு ரேட் பேசி வாங்கினான். குப்பை காசானதுல நாயர் குஷி. சீப்பா கிடைச்சதுல யுவன் குஷி. பழைய சோறு தின்னு வெறுத்துப் போன நாய், யுவன் போட்ட புதுசா கிடைச்ச காலாவதி பிஸ்கட்டால செம குஷி. இப்பல்லாம் அது, யுவனைக் கண்டால் குறைப்பதில்லை.  யுவனும் நாயும் ஃப்ரண்ட் ஆயிட்டாங்க. ஆஹா. பை ஒன். டேக் ஒன் ஆஃபர்னு சொல்றது இது தானா? 


வாக்கிங்கல ஆரம்பிச்சு லவ் ஜோடி ஆகி,  டாக்கிங்கில ப்ரோமோட் ஆயி இப்ப ரன்னிங்க்காக வெயிட்டிங். ஆம். காமதேவன் இன்னும்  அந்த ரன்னிங் ஆப்ஷன செலக்ட் பண்ணல. அமாவாசைக்காக வெயிட்டிங். 


யுவதிக்கு தெரியும். ஹிட்லர் அப்பாகிட்ட லவ்வுக்கு க்ளியரன்ஸ் கிடைக்காதுன்னு. ஸோ, யுவதி வெயிட்டிங் ஃபார் அப்பாவின் அவுட் ஸ்டேஷன் டூர். யுவன் வெயிட்டிங் ஃபார் டைம் அண்ட் ஆப்பர்சுனிடி. நாய் குறைக்காமல் வெயிட்டிங் டு ஷோ க்ராட்டிட்யூட். காமதேவன் வெயிட்டிங் ஃபார் அமாவாசை, 


சுபம் சீக்கிரம்ன்னு சொல்லுவா. எல்லோருக்கும் தோதா அந்த அமாவாசையும் வந்தது.  


ஹிட்லர் ஆன் டூர். யுவன் யுவதி ஓட்டத்திற்கு ஜரூர். நாய் பழைய பிஸ்கட் சாப்பிட்டதுல தொண்டையில கிச் கிச். இயல்பாவே குறைத்கணும்னா கூட குறைக்க முடியல. அதுவும் அல்லாம பிஸ்கட் விசுவாசம் வேற. ஸோ, பழுத்த அமாவாசை ராத்ரில காமதேவன் "ஜோடி ஜாய்னிங்" ஆப்ஷன க்ளிக் பண்ண,  யுவன் யுவதி கை கோர்த்து வீட்டை விட்டு ஓட, நாய் வசதியா குறைக்காமலிருக்க, திடீர்னு ஒரு கலவையான சத்தம். டூர் கான்ஸல் ஆயி ஹிடலர் டாடி ரிடர்னிங். இருட்டுல  சரியா கண்ணு தெரியாம டாடி மேல ஜோடி மோத, முக்கோண காயம். எல்லோரும் திரும்ப பழைய இடத்துக்கு வர, காமதேவனுக்கு, பர்ஃபாமன்ஸ் ரெவ்யூவில் கருப்பு புள்ளி. யுவனுக்கும் யுவதிக்கும் எக்ஸ்ட்ராவ ஹிட்லர் டாடி கிட்ட செம அடி. 


இப்பல்லாம் யுவன் நடை பயிற்சி  உடுப்ப மாத்திட்டான். நோ மோர் ட்ராக்ஸ். ஒன்லி வேஷ்டி. தலைக்கு அடையாளம் தெரியாம இருக்க மங்கி கேப். ஆனா, யுவதி தான் கண்ணுல படல. ஹிட்லர் டாடி குரியர்ட் யுவதி டு பாட்டி வீடு. 


இதுல ஒரே பெனிஃபிஷயரி நாய்தான். பிஸ்கட் மட்டும் யுவன் உபயத்துல தினமும் கிடைக்கும். ஊர்ல  யுவதி, "அன்னக்கிளி சுஜாதா" மாதிரி பாடிகிட்டு இருக்கா. அவ வீட்ல இல்லைன்னு தெரியாம,  யுவன், " பூங்காத்து திரும்புமா" ன்னு காதல் பாட்ட கேட்டு ஓடி கிட்டு இருக்கான், எப்பவாவது எட்டிப் பாப்பா நம்மாளுன்னு ஒரு நம்பிக்கையில. பார்க்கலாம். அடுத்த பர்ஃபாமன்ஸ் ரெவ்யூவில லவ் மேட்டர் க்ளிக் ஆகுதான்னு. அதுவரை, "லவ்ஸ் லேபர் லாஸ்ட்."


"ஆல் ஈஸ் வெல் தட் என்ட்ஸ் வெல்" - Story by Jagannath

  

"ஆல் ஈஸ் வெல் தட் என்ட்ஸ் வெல்" - Story by Jagannath


விமானம் சென்னை விமான நிலையத்தில் இறங்கும் என்று விமான பணிப்பெண்ணின் பன்மொழி வாக்கியங்களை கேட்டதும் ரகுவிற்கு உற்சாகம் மேலும் கூடியது. மொத்தம் இருவாரங்கள் தான் விடுமுறை. இதில் டைட் ஏஜன்டாவுடன் தன் சொந்த ஊரில் பலரையும் கண்டு திருப்தி படுத்தியாக வேண்டும். சென்றமுறை அத்தை , மாமா என்று சிலரை பார்க்காமல் ஊர் திரும்பியதால் அவர்களுக்கு வருத்தம்.  அத்தைக்கும் மாமாவுக்கும் தலா ஒரு பெண் உண்டென்றாலும், ரகுவிற்கு தன் வீட்டருகில் உள்ள பால்ய சினேகிதிகள் சிலர் மீதுதான் விருப்பம். அதிலும், சண்டைக்கோழி மைதிலி என்றால் ஸ்பெஷல். அதனால்தானோ என்னவோ அத்தைப் பெண் அனுவும் மாமா பெண் பாமாவும் இரண்டாம் பட்சமாகிவிட்டார்கள் ரகுவிற்கு. 


ரகுவிற்கு அப்பா மட்டும்தான். கூடப்பிறந்தவர்கள் யாருமில்லை. அப்பா கொஞ்சம் கண்டிப்பு. இந்த கோபியர் கூட்டத்திலிருந்து அவனை காப்பாற்றி நன்றாக படிக்க வைத்து, கூடவே சமயல் மற்றும் வீட்டு வேலை எல்லாம் சொல்லிக் கொடுத்து ஒரு செல்ஃப் மேட் ஆக வளர்த்து, வெளிநாட்டிற்கு மேற்படிப்புக்கும்  அனுப்பி மகனப் பற்றிய கவலை இல்லாமல் ஊரில் ஒண்டியாய் வாழ்ந்து கொண்டிருப்பவர். அக்கம் பக்கம் அரட்டை, திண்ணை கச்சேரி என்றில்லாமல் சமையல், பூஜை, நீயூஸ்பேப்பர், வாக்கிங் என்று இருப்பவர். ரகு வெளிநாட்டில் பட்டமேற்படிப்பு முடித்து வேலையில் சேர்ந்து தன் திறமையால் பணமும் பதவியுமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான். கோதுமை நிறமாயிருந்தாலும் நல்ல களையான முகமும் வசீகரமான தோற்றமும் உள்ளவன். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் கல்யாண சந்தையில் ரேடிங் அதிகமுள்ள ஆண்மகன். கண்டிப்பாக வளர்த்தாலும்  கல்யாண விஷயத்தில் மகனின் விருப்பத்திற்கும் போக்குக்கும் விட்டு கொடுப்பவர். என்ன, ஒரு விஷயத்தில் மட்டும் நோ காம்ப்ரமைஸ். ஊரை விட்டு வர முடியாது. நீயும் எனக்காக இங்கேயே இருக்க வேண்டாம். அவரவர் வாழ்க்கை அவரவர் விருப்படி என்று சொல்பவர். ஆனால், ரகு வரும் போதே இரண்டு தீர்மானங்களில் ஸ்ட்ராங் ஆக தீர்மானித்து விட்டான். ஒன்று மனதிற்குப் பிடித்த பெண்ணுடன் கல்யாணம். இரண்டு, மனைவி மற்றும் அப்பா இருவரையும்  கூட வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வது. எக்காரணத்தைக் கொண்டும் இதில் நோ காம்ப்ரமைஸ்


ஒரு வழியாக செக்கிங் இமிக்ரேஷன் முடித்து இரண்டு ஜம்போ பெட்டிகளுடனும் லேப்டாப் அடங்கிய பேக் பாக்குடனும் வெளியே வந்தான். இனி இங்கிருந்து கும்பகோணம் வரை செல்லவேண்டும். பஸ்ஸை விட டாக்ஸி உசிதம் என்று ஒரு ஓலாவை புக் செய்தான். சார், ஒரு பத்து நிமிஷம். வண்டி வந்துரும் என்று புக்கிங் கிளார்க் சொல்ல, அருகில் இருந்த காஃபி ஷாப்பில் ஒரு காஃபி வாங்கி, ஆஹா பேஷ் பேஷ் என்று ருசித்தவாரே ஒரு நோட்டம் விட்டான். அட, அந்த கூலிங் கிளாஸ் போட்ட பொண்ண பார்த்தா நம்ம மைதிலி மாதிரி இருக்கே என்று நினைத்துக் கொண்டவன், அவளிடம் கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண் ரகுவைப் பார்த்து, டேய் ரகு, நீ எங்கடா இங்கே என்றாள். பரஸ்பரம் பேசியதன் பின் விளைவு. ரகுவுக்கு கும்பகோணம் வரை மைதிலியின் கம்பெனி. மைதிலி, ரகுவின் ஷார்ட் லிஸ்டட் பெண்களில் ஒருவர். மற்ற இருவர் கீதா மற்றும் சுதா. மைதிலி நல்ல பால் வெள்ளை. நல்ல உயரம். இந்த ஆறடியானுக்கேத்த ஆறடியாள். இன்ஜினியரிங் பட்டதாரி. வாயில் AK47 வைத்திருப்பவள். சுடச்சுட குண்டுமழை பொழியும். ஆனால் காரியத்தில் கெட்டிக்காரி. அட்ஜஸ்டிங்க் டைப். ஆனால் கொஞ்சம் மூடி. எந்த ஒரு சப்ஜெக்டிலும் டிஸ்கஷனில் இறங்கி அடிப்பாள். ரகுவும் இவளுக்கு  சளைத்தவன் இல்லை. சிறு வயதில்ருந்தே வகுப்பில் இருவருக்கும் போட்டிதான். கீதா மற்றும் சுதா இருவரும் படிப்பில் சுமார்.  ஆனால் வீட்டு வேலை மற்றபடி வெளி வேலைகள், சங்கீதம், தையல் என்று இத்யாதிகளில் சூரர்கள். கீதா அதிகம் பேசாதவள். சுதா காரியத்திற்கு மட்டும் பேசுவாள். சீனுவாசனுக்கு தன் மகன் ரகுவிற்கு உறவில் ஒரு பெண்ணை கட்டிவைத்தால் நல்லது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். சீனுவாசனுக்கு ரகுவின்  நண்பிகள் மூன்று பேரையும் நன்றாகத் தெரியும். சிறு வயதிலிருந்தே நோட்ஸ் வாங்க அடிக்கடி வீட்டிற்கு வருபவர்கள். அதிலும் இந்த மைதிலி, "என்ன மாமா சாப்ட்டேளா? என்றால் சீனுவாசன் பதிலுக்கு ரகுவைத்தானே பார்க்க வந்தே. வந்த வேலையை போய் பாரு என்று அனுப்பிவிடுவார். தன் மகனையோ அல்லது உறவுக்கார பெண்களையோ அல்லது இந்த மூன்று பெண்களயோ என்றுமே சந்தேகப்பட்டது கிடையாது. ஆனாலும் ஒரு மாரல் போலீஸ்ங்க் எல்லோர் மீதும் உண்டு. சீனுவாசனுக்கு தன் மகனுக்கு பெண் உறவுக்குள்ளேயா அல்லது மகன் ஏதாவது புதுவரவுடன் வருவானா என்று ஒரு சிறு சந்தேகம். இறுதி முடிவு மகனே எடுக்கட்டும் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டார். பசியுடன் வருவான் என்று மகனுக்காக சற்று கவனமாக சமைத்து வைத்திருந்தார்.  பொழுது இன்னும் சில நேரங்களில் சாய்ந்து விடும். ஏழு மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டு விடும் பழக்கம் சீனுவாசனுக்கு. திண்னையிலே உட்கார்ந்து ரகுவின் வரவிற்காக காத்திருக்கிறார். மகன் இருக்கும் வரை சேர்ந்து சாப்பிடாலாமே என்று ஓர் ஆசை. ரகு சொகவாசி. இன்னோவா புக் செய்திருந்தான். ட்ரைவர் தனக்கு தூக்கம் வராமலிருக்க குத்துப்பாட்டை போட்டு குஷியாக வண்டி ஓட்டிக்கொண்டிருந்தார். ரகுவிற்கு மைதிலியுடன் பேசுவதற்கு பாட்டு இடைஞ்சலாக இருக்கவே மைதிலியிடம் நான் வேணா வால்யூமை கம்மி பண்ண சொல்லட்டுமா என்றான். மைதிலி சைகையால் வேண்டாமென்று சொல்லி ட்ரைவருக்கு நாம் பேசுவது கேட்கும் என்று மெல்லிய குரலில் சொன்னாள். சொல்லியதோடு இல்லாமல் ரகுவைப் பார்த்து கண் சிமிட்டியபடியே லேசாக சிரித்தாள். அதைப் பார்த்தவுடன் ரகுவிற்கு உள்ளுக்குள் ஒரு ஜெர்க் அடித்தது. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் மைதிலியிடம் அவளின் படிப்பு, வேலைப் பற்றி தெரிந்து கொண்டான். தன் பங்கிற்கு அவனுடைய அப்டேட்ஸ்களையும் கொடுத்தான். 


ட்ரைவர் மெதுவாக ரகுவிடம், சார் ப்ரேக்ஃபாஸ்ட் வேணுமா இல்லை நேரா கும்பகோணமா என்று கேட்டான்.  ரகு மைதிலியை பார்க்க, அவள் ஐ டோன்ட் மைன்ட். வை டோன்ட் வி ஃப்ரீ அவர் லீம்ப்ஸ் என்று கேட்டாள். ரகு, ட்ரைவரிடம், நல்ல வெஜ் ஹோட்டலா பார்த்து நிறுத்துங்க. நீங்களும் எங்களோட சாப்பிடலாம் என்றான். 


ஹை வேயில் கார் மிதந்து கொண்டிருந்தது. சட்டென்று ஒரு இடத்தில் காரை ஓரங்கட்டி, சார் வாங்க, இங்க டிஃபன் நல்லா இருக்குமென்றான். ஹோட்டலில் உள்ளே நுழைந்ததும் ரகு மைதிலியிடம் ஏசி ரூமில் உட்காரலாமென்றான். அவளோ, வேண்டாம் ரகு, இங்கே ஃப்ரெஷ் ஏர் நல்லாயிருக்கு. கூட்டமும் இல்லை. ஏசியில உக்காந்தா அரை இருட்டா இருக்கும். வெளிச்சம் போறாது. ஒரு மாதிரி ஸ்மெல் வரும். சர்விங் லேட்டாகும். இங்க தான் பெஸ்ட். ஓகேவா என்றாள். ரகு மைதிலியிடம், ஏய் நீ மாறவேயில்லை. ஏசி வேண்டாம்ன்னு சுருக்கமா சொல்லாமா அதுக்கு ஒரு கோனார் நோட்ஸ் போட்ட பாரு. அங்க நிக்கறே நீ என்றான். சரி, சரி என்ன சாப்பிடறே சொல்லு. மைதிலி, ரகுவிடம் நீ என்ன அந்த ரவா தோசை தானே. அதையே எனக்கும் சொல்லு என்றாள். மைதிலிக்கு தெரியும். விட்டா இவன் சுஜாதா சொன்ன ரவா தோச மஹாத்மியத்தை அரைமணி நேரம் கொஞ்சம் சொந்த சரக்கோட ஓட்டுவான். அடை பொங்கல் இப்படி எல்லாத்துக்கு சுஜாதாவோட சரக்க சொல்ல ஆரம்பிப்பான். ரகு ஒரு டை ஹார்ட் சுஜாதா ஃபான். மைதிலி ரகுவிடம், "ரகு சீக்ரம் சாப்பிட்டு கிளம்பலாம். நான் ஒரு நாலு மணிக்குள்ள எங்காத்துல இருக்கனும்.   என்ன ட்ராப் பண்ணிட்டு நீ உங்காத்துக்கு போ" என்றாள். ரகுவும் ஏன் எதற்கு என்று கேட்காமல் சரி என்றான்.  சாப்பிட்ட பின் மைதிலியிடம், ஆர் யூ ஓகே? இல்ல ஸ்மால் ரூம்...... என்று இழுத்தான். மைதிலி, ஐ ஆம் பர்ஃபெக்ட்லி ஃபைன் என்றாள். "சரி, வா போகலாம். ட்ரைவர் கிளம்பலாமா? என்று காரை நோக்கி நடந்தான். 


போகும் போது காரின் ஏ.சி. சுகத்தில் உண்ட களைப்பில் கொஞ்சம் தூக்கம் கண்ணை தட்டியது. மைதிலி ரகுவைப் பார்த்தாள். என்ன இவன் சீக்கிரம் வீட்டுக்குப் போகனும்னு சொன்னா என்ன விஷயம்னு கூட கண்டுகலயே. ரொம்ப மாறிட்டானே. லொட லொடன்னு பேசற ரகுவா இவன். ஒரு பர்ஃபெக்ட் ஜென்டில்மேன் போல இருக்கானே என்று நினைத்துக் கொண்டாள். மைதிலியும் சற்று கண் அயர்ந்தாள். கண்ணை மூடிய ரகுவிற்கு மனதில் ஒரு சஞ்சலம். இவளை கல்யாணம் பண்ணின்டா என்ன? கேக்கலாமா வேணாமா? ஒரு வேளை கேட்டு, குய்யோ முய்யோன்னு கத்தி கார்லேந்து குதிச்சு ஓடிட்டாள்னா? எதுவானாலும் சரி. ஊருக்கு போறதுக்குள்ளே நம்ம விருப்பத்த ஆம்பளையா லக்ஷணமா சொல்லிடனும்ன்னு மனசுக்குள்ள ஒரு ட்ரை ரன் விட்டுப் பார்த்தான். 


மைதிலிக்கும் இதே திங்கிங்தான். ஆனா ஒரு சின்ன ப்ரச்சினை. சாயங்காலம் யாரோ வெளியூரிலிருந்து பெண் பார்க்க வரான்னு சொல்லி அடிதடியா பாம்பேயிலிருந்து ஃப்ளைட் பிடிச்சு வரச் சொன்னாரே. அப்பாகிட்ட ரகுவை கேட்டுப் பாக்கலாம்ன்னு எப்படி சொல்றது? காலையில் ஏர் போர்ட்ல ரகுவை பார்க்கற வரைக்கும், ரகு நம்ம எபிஸோட்லியே இல்லையே. திடீர்னு நுழைஞ்சான். ஒரு ஈர்ப்ப கொடுத்துட்டானே. என்ன செய்யலாம் என்று யோசிக்கலானாள். 


ரகு, எதுக்கும் நாம ஒரு அப்ளிகேஷன போட்டு வைக்கலாம்ன்னு மைதிலியிடம், "மைதிலி, ஐ ஆம் கம்மிங் ஸ்ட்ரெய்ட். டு யூ லைக் மீ? ஐ லைக் யூ. ஆர் யு ஓகே டு....... " என்று அவளைப் பார்த்தான். மைதிலி ஒரு சிறிய புன்னகையுடன், " ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் ஸர்வ்ட்" என்று கண் சிமிட்டினாள். ரகு புரியாதவனாக "அப்படின்னா நான் ஃபர்ஸ்ட்டா அல்ல செகண்டா?" என்றான். மைதிலி ரகுவிடம், "டோண்ட் வர்ரி. நாளைக்கு உங்க அப்பாவோட எங்காத்துக்கு வா. R.A.C. கன்ஃபர்ம் ஆகுமான்னு பார்ப்போம்" என்றாள். ரகுவிற்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குள் கும்பகோணம் வந்து விட்டது. முதலில் மைதிலியை இறக்கி விட்டு, "ஸீ யு டு மாரோ" என்றான். "ஸ்யூர், டோண்ட் மிஸ் டு விசிட்" என்று சிரித்து கை அசைத்து வீட்டினுள்ளே சென்றாள். 


காரைப் பார்த்ததும் சீனுவாசனுக்கு ஒரே சந்தோஷம். வாப்பா ரகு என்று ஒரு பெட்டியை எடுக்க முற்பட்டார். "அப்பா, நீங்க எடுக்காதீங்க. கொஞ்சம் ஹெவி " என்று சொல்லி ட்ரைவரிடம் உள்ளே வைக்க உதுவுமாறு கேட்டான். பெட்டிகளை வைத்து ட்ரைவரை செட்டில் செய்து அனுப்பி இருவரும் உள்ளே வந்தமர்ந்தனர். 


"அப்பா, நான் குளிச்சு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிடறேன். அதுக்கப்புறம் வெளியே போய் சாப்பிடாலாம்"  "ரகு, வெளிய வேண்டாம். நானே சமச்சு வச்சுருக்கேன். நீ மெதுவா வா. சேர்ந்து சாப்பிடலாம்" தந்தையும் மகனும் சாப்பிடும் போது பரஸ்பரம் விசாரித்துக் கொண்டார்கள். 


சாப்பாடு கடை முடிந்ததும், தந்தைக்கும் மகனுக்கும் ஒரு சிறிய தயக்கம். எல்லாம் கல்யாண விஷயம் தான். ரகு, "அப்பா" என்று சொல்லவும் ஒரே நேரத்தில், அவர், "ரகு" என்று சொல்லவும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, "பஹ்லே தும், பஹ்லே தும்" என்று பாபி சினிமா பாட்டு ரேஞ்சுக்கு நீயா நானா என்று, கடைசியில் அப்பா, ரகுவிடம், "ஒன் கல்யாணத்தை பத்தி பேசணும்.நானா ஒரு பொண்ண பத்தி சொல்லி அது ஒனக்கு பிடிக்காம எங்கிட்ட சொல்ல சங்கடப்படவேண்டாம். உன் மனசுல யாரும் இருந்தா சொல்லு" என்றார். "அப்பா, அது வந்து...." என்று மைதிலியை பார்த்ததிலிருந்து அவளிடம் தன் விருப்பத்தை சொல்லியது, அவளை வீட்டில் விட்டது வரை சொன்னான். அவரும் கேட்டுவிட்டு, "ஆமா, அவ ஒன்கிட்ட இன்னிக்கு அவள பொண்ணு பார்க்க வெளியூரிலிருந்து வராங்ககிற விவரத்தை ஒன் கிட்ட சொன்னாளோ?" என்று கேட்டார். ரகுவிற்கு குப்பென்று வியர்த்தது. மெல்ல அவள் சொன்ன ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் ஸர்வ்ட் பத்தி அப்பாகிட்ட சொல்லி, "ஆனா நாளைக்கு உங்கள கூட்டிண்டு அவாத்துக்கு வரச் சொல்லியிருக்கா. அப்பா. கொஞ்சம் நாளைக்கு நாம ஒரு நடை போய் பார்த்துரலாமே" என்றான். தன் மகனை இந்தப் பெண் இரண்டாம் பட்சமாக நினைக்கிறாளோ என்று அவருக்கும் சந்தேகம். எப்படியும் விடிந்தால் தெரியப் போகிறது என்றவாறு தூங்கப் போய்விட்டார். ரகுவிற்கோ ராத்துக்கம் போச்சு. சே. என்ன நாம இப்படி ஆயிட்டோம். நேத்து வரை ஊருக்கு வறோம்ங்கற சந்தோஷத்த தவிற வேற எதுவும் இல்லை. மைதிலியை பார்த்தததுக்கப்புறம் நிலமை மாறிடுத்தே. அதுவும் இவ ஒரு ஜெர்க் குடுத்துட்டுப் போய்ட்டாளே. சரி. நாளைக்கு என்ன தான் நடக்கும்ன்னு பார்ப்போம். மைதிலி சொன்ன மாதிரி நாமும் நம்ம உறவுப் பொண்ணுங்களை R.A.Cல தானே வச்சிருக்கோம். ஸோ. ஆல் ஈஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார் என்று நினைத்தவனாக, லேப்டாப்பில் வேலை செய்ய ஆரம்பித்தான். ஜெட் லாக் ஒரு பக்கம், ஆன்க்ஸைட்டி மறுபக்கம்.  வேலை ஓடவில்லை. சரி. ஈமெயில் மட்டும் பார்த்துவிட்டு தூங்கலாம் என்று மெயிலை நோண்டிக் கொண்டிருந்தான். எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை. காலை கண் விழித்த போது ஒன்பது மணி. உடனே எழுந்து காலைக் கடனை முடித்து குளித்து ரெடியானான். அப்பா, அவனிடம், "என்ன ரகு, நல்லா தூங்கினியா? "இல்லப்பா. தூக்கத்தை தேடினேன். காணோம்" என்றான் சிரித்தவனாக. "என்னப்பா, ஒரு நடை போய்ட்டு வந்துருவோமா? " ரகுவுக்கு அவசரம். டென்ஷன் வேறு. "எங்கடா? என்றார் சீனுவாசன். " அதாம்ப்பா, மைதிலி வீட்டுக்கு... நேத்தே சொன்னேனே. உங்களுக்கு பிடிக்கலைன்னா வேண்டாம்ப்பா. போகவேண்டாம்." "இல்லைடா, ரகு. அந்தப் பொண்னு உன்னை அலட்சியப்படுத்தறா மாதிரி தெரியுது. கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாமா?" எதுக்கும் உன் ஃப்ரண்ட் அப்புவ கேட்டுப் பாறேன். அங்க என்ன நிலவரம்ன்னு. அவாத்துக்கு பக்கத்து ஆம்ல தானே அப்பு இருக்கான்." அப்பாவுக்கு கவுரவம். ரகுவுக்கு கலவரம். இதுல அப்பு வேற உள்ளே பூந்தா, சும்மா ஒரு கை எரி குண்டை ரண்டு பக்கமும் வீசுவானே. என்ன செய்யலாம் என்று யோசனையில் மூழ்கினான். திடீரென்று ரகுவுக்கு ஒரு யோசனை. இந்த கவுரவத்தையும் கலவரத்தையும் செஸ் ஆட்டத்துல 'காஸ்லிங்' பண்ற மாதிரி இடம் மாத்திவிட்டா? குட் ஐடியா என்று தனக்குத் தானே ஒரு ஷொட்டு கொடுத்துக் கொண்டு அப்பாவிடம், "அப்பா, எனக்கு இந்த அத்தை மாமா பொண்ணுங்கள் வேண்டாம். கூடப் படிச்ச சுதா, அனுவும் திருப்தியா இல்லை. அதுவும் இல்லாம, அவங்க யாரும் ஒரு அவசரத்துக்கு எவ்வளவு தூரம் உங்கள பார்த்துப்பான்னு தெரியல.  எல்லாம் கல்யாணம் ஆகிற வரை தான். அப்புறம், சொந்தம்ன்னாலே கவுரவம் போயிடும். அதனால மைதிலி செட் ஆவாளான்னு பார்ப்போம். இல்லைன்னா, எனக்கு கல்யாணமே வேணாம். அப்பா, உங்கள பார்த்தாச்சு. நீங்க எங்கூட வந்துருங்க. நம்ம ரெண்டு பேரும் ஹாப்பியா இருப்போம். உங்க கவுரத்துக்கு டாமேஜ் ஆக விடமாட்டேன்." கலவரத்த அப்பா பக்கம் மாத்தினான். கவுரவத்த சும்மா தன் பக்கம் இழுத்தான். 


" அது இல்லடா ரகு, மைதிலி நல்ல பொண்ணுதான். நீ அவசரப்படாதே. நீ சொல்றது சரிதான். மைதிலி அளவுக்கு மத்த பொண்களுக்கு பொறுப்பும் அக்கரையும் கிடையாது. ஏதோ, சொந்தம் விட்டுப் போயிடக்கூடாதுன்னு தான் பார்த்தேன். மத்தபடி, மைதிலி தான் ஒனக்கு ஏத்த பெண்ணு. சரி, வா. நாமளே நேரா அவாத்துக்குப் போயி கேட்டுருவோம்." அப்பாவும் மகனும் மைதிலி வீட்டு வாசலில் சற்று நின்றனர். உள்ளே நடக்கும் விவாதம்தான், இவர்கள் 'என்ட்ரீக்கு ப்ரேக்' போட்டது. 


மைதிலி தன் பெற்றோரிடம் கடைசியாக சொன்னதை மட்டும் நாம் கேட்டால் போதும். நமக்கு 'எண்ட் ரிசல்ட்' தான் முக்கியம். 

'மணந்தால் மகாதேவன். இல்லையேல் மரண தேவன்' என்று மைதிலி தன் பெற்றோரை மிரட்ட, ரகுவும் அவன் அப்பாவும் மைதிலி வீட்டின் உள்ளே நுழைய, ……அப்புறமென்ன, 'சிங்கிள் டிக்கட்ல' வந்த ரகு, அப்பா, மைதிலி சகிதம் மூன்று டிக்கட்களுடன், வெளிநாடு புறப்பட்டான். "ஆல் ஈஸ் வெல் தட் என்ட்ஸ் வெல்". 




ON DISHES

பொங்கல்

பயணச் சீட்டு இல்லாமல் எவரும் உலகை சுற்றி வரலாம். 

உல்லாசமாய் ஆடலாம், பாடலாம்.

நாட்டிற்கே அரசனாகலாம்.

உலக அழகியையே மணக்கலாம். 

தனவான் ஏழை என்று வித்தியாசமில்லாமல்

உண்டவரை கனவுலகில் இழுத்து செல்லும் பொங்கலே நீ வாழ்க.


தோசை

தோசை. நீ உருவாகும் போது எழும்பும் ஓசை ஒரு கர்நாடக இசை.

உனக்கு இரும்பென்றால் காதல். கல்லை விட்டு வர மாட்டாய். மீறி பிறிக்க முற்பட்டால் கந்தலாய் உன்னை மாய்த்துக் கொள்வாய். நானும் பல முறை உன்னை கல்லில் பிய்த்து உன் காதலை கொன்றிருக்கிறேன்.  

கை தேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் நீ வாட்டம். மற்றவர்களிடம் நீ காட்டுவது முகமாட்டம். 

காதலுக்கு எதிரி நான் ஸ்டிக் டாவா. 

வா வா என்று தோசை ஆசைப்பட்டாலும் போ போ என்று அனுப்பி விடும் முற்றும் துறந்த முனிவன். ஒட்ட விட மாட்டான்.

தோசையே, நீ பலருடன் கூட்டு சேர்ந்து நாவிற்கு தரும் சுவை. அது தனி வகை.

மசாலாவை உன்னுள் அடக்கி நாவில் குத்தாட்டம் போடுவாய். 

சட்னி சாம்பருடன் பட்னியை மறக்கடிப்பாய். அதிலும் குருமா, தோசைக்கு சரியா வருமா என்றால் உண்டு பார் சுகமா. 

நீ கர்நாடகாவில் நீர் தோசை. ஆந்திராவில் பெசரட்டு. கேரளத்தில் கப்பை தோசை. ஆனால் உன் மேல் ஆசை கொண்ட தமிழனுக்கு மட்டும் தான் நீ ஏழிசை பாடும் தோசை. 

குழியிலிட்ட குஷ்பு இட்லி கல்லாய் மாறுவதும் கல்லில் தேய்த்த தோசை என்றும் பொன்னிறமாய் ஜொலிப்பதும் நம் நேரத்தை பொருத்தது தான். எனினும் பரங்கியனை போல் வெண்மையான மாவை ஆப்பிரிக்கனை போல் கருப்பாக செய்வது அவரவர் செய்த ஊழ்வினையே.


Thursday, July 16, 2020

DELAY IN GETTING MARRIED – THE KARMA EFFECT

Delay in marriage is due to karma effect. It is connected to previous birth or births. The sin committed in earlier birth in marital fold like abusing the partner, cheating the partner, abusing partner’s parents, causing mental stress to the partner or partner’s parents, harassing the partner for dowry, leaving the partner in lurch etc. The list is endless. The sin created has to be suffered either in the same birth or next birth. The sanathana dharma speaks about three types of karmas – sanchitha karma (past birth sins), prarabhda karma (current birth sins) and kaamiya karma (illicit affair or touching inappropriately the opposite sex be it for pleasure or money or premarital sex or ditching the partner). The subject of karma is very vast. For brevity sake, I have brought in only three types of sins. All the three or one or two can cause marital delay.

One need to understand that there are two aathmaas – Paramathma [sanctified soul] and Jeevathma [cursed soul]. The jeevathma takes birth and Paramathma either stays in heaven or in between heaven and earth (according to the degree of sanctity). Upon death, according to the good deeds done, the jeevathma will get diminished and paramathma quotient will increase. If more sin is committed, Jeevaathma will grow in size causing several births. When Jeevaathma diminishes and becomes zero, then, there is no rebirth. Or one may born as sanctified or glorified person to help the humanity. [example – sages, siddhaas and saints known as uththama purushaas]

The aspect of annihilation of karma is a matter of debate. By doing remedy to annihilate karma (pariharam and prayaschitham), the paramatma will get fortified but the jeevatma has to suffer for the wrong done. There is no escape route. Yes, sin can be mitigated in this birth but cannot be eradicated altogether. It will add up and come back more vigorously in next birth. Prayers, Poojashavans (prayers and offerings in holy fire) can mitigate but cannot eradicate. That is why sages and siddhas say, suffer but don’t postpone to next birth (கர்மாவை அனுபவிச்சு கழிச்சு விடு. பரிகாரம் தேடாதே). So, in order to bear the sufferings and pain, one needs to surrender to God. HE will change the mind to understand the philosophy of karma and its impact. HE will tune the mind to undergo the suffering. After all mind is the cause for all troubles and happiness.

All said and done, simple prayer with a technique adopted can get rid off karma effect according to Parameshwara (the Supreme of this Universe). Though looks simple, not all can do and achieve success. Again karma plays its part and deviates a person from emancipation. There are three sins for which there is no prayaschithamBrahmana hathyasambogam (sexual indulgence) with pathni (wife) of Guru and abhichara prayogam (witch craft). But Parameshwara says, even these sins can get exonerated when the sinner does prayer all by himself with the technique HE has prescribed.

Any prayer or offering given to God through another person will not yield result in Kali Yuga. The prescription in Kali Yuga is prayer by oneself. When poorna aahuthi (the final offering in holy fire) is offered in havan (homam), the sankalpa (the purpose [for which an offering is made in fire]) should fructify immediately, when the offering is slowly consumed by the homa agni. But in any homam does this happen? Rare of the rarest. That is why self indulgence is the right way to seek annihilation from sins. I have heard of only two instances where the homa derived sankalpa result instantly in Kali Yuga.

As I said earlier, the annihilation of sin of others through havan in Kali Yuga is a point of debate. But havan done in nishkasmya (without any purpose or wish), will yeild result by fortifying paramatma. Fortifying paramatma takes one closer to God and unite with HIM. Unless, pooja or beeja japam (chanting seed mantras to invoke the cosmic energy) is done by one for his/her immediate family members and for himself/herself, the benefit will not flow if done for non family members and family members outside the close circle. Mantras and tantras will fortify paramatma but jeevatma has to diminish and become zero only through birth and suffering for sins committed.

Again, mantras and tantras performed or chanted by someone on behalf of another person will not work. Even if payment is made, still it will not work. If someone can get rid off the karma effect by making payment, then, those who perform prayaschitha pooja (prayer for annihilation of sin) for others will become filthy rich.

Understand this simple logic. If you suffer from stomach pain, your medic can only prescribe the medicine but he cannot consume the medicine on your behalf. You will have to consume the medicine yourself to get rid off stomach pain. Similarly, someone can prescribe pariharam but you cannot engage a person to do pariharam for your sake. Agency engagement does not work.

Then what is the recourse for delayed marriage? The method is simple but to practice is difficult. As I said, talk to your chosen Deity (God) with utter devotion and seek remedy for the known and unknown sins committed in past and current birth. Seek pardon from Deity and let your prayers come from your inner heart. And this is not a one time affair. A prayer to God is similar to eating or performing daily oblations. It is a continuous process in life.

Those who do not perform the duties as cast as per one’s religious faith but enjoy a good life in current birth is because of drawing the punya (benefits) from their account. As long as they do not add up to any sin in current birth, they will escape. Once punya balance is zero, then, the suffering will start. There is no overdraft facility.

dr s jagannath / July 2020 / feedback to drjagannaths@gmail.com

திருமணம் என்பது இரு மனம் சம்பந்தப் பட்டது

திருமணம் என்பது இரு மனம் சம்பந்தப் பட்டது. ஆனால் இரு மனத்திற்குள்ளே மற்றவர் நுழையும் போது பிரச்சனைகள் உருவாகிறது. ஒருவர் வாழ்க்கையில் உறவினர்கள், நண்பர்கள், அலுவலக சக பணியாளர்கள், அக்கம் பக்கத்தினர் என்று ஏராளமானவர்களுடன் பழக வேண்டியிருக்கிறது. இதில் ஆணும் பெண்ணும் விதிவிலக்கல்ல. நம் குடும்பம் என்றால் அது கணவன், மனைவி மற்றும் குழந்தைகள். நம் குடும்பத்தில், பெற்றோர் உட்பட மற்றவர்களை எல்லை தாண்டி அனுமதிக்கும் போது குழப்பங்கள் ஏற்படுகிறது. எந்த பிரச்சினை ஆனாலும் மன வருத்தங்கள் ஏற்பட்டாலும், குடும்ப உறுப்பினருள்ளே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது மனிதர் நுழைந்தால் குடும்பம் சிதறும். குடும்ப உறுப்பினருக்குள்ளே ஏற்ற தாழ்வுகளோ அல்லது வித்தியாசம் பார்ப்பதா அல்லது அங்கத்தினரின் உறவினர்களை தரக்குறைவாக பேசுவதோ கூடாது. பொருளாதார தட்டுபாடென்பது வண்டிச் சக்ரம் போன்றது. வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் நிரந்தரமல்ல. குடும்பத்தில் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை மிக முக்கியம். ஒரு பிரச்சனையை உடனே தீர்க்க முடியவில்லை என்றால் ஆறப் போடுங்கள். நிறைய பிரச்சனைகளுக்கு காலம் தான் அருமருந்து. பெற்றோரை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அவர்களை உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளுக்குள் நுழைய அனுமதிக்காதீர்கள். பெற்றோர்கள் வயது வேறு. உங்கள் வயது வேறு. Experience is merely an increase in age unless there is a learning out of once experience (experiential learning). Exposure is more appropriate than experience. Life is dynamic and so with problems. Parental influence and intrusion is the causative factor for many marriage breaks. Take care of either parents with absolute commitment. At old age, they need their children’s support. But support and care doesn’t mean allowing them into your personal and marital affairs. Today, youngsters are more exposed to environment than parents of yester years. Exposure wise, youngsters are more wiser than elders. Compassion, respect for human and values, sympathy and empathy towards partner can solve Himalayan issues in a jiffy. All that comes out of the body like sweat, odor, shit are dirty and filthy. But only the word that comes out of the body is controllable. Word can be sweet. Three things in life will not come back – a sped arrow, a spoken word and a missed opportunity. It is wise to be less talkative. Action should speak more than words. Give thy ear but few thy tongue is an old adage. Divorce is not the ultimate solution for marital issues. Divorce is a ditch of hell where fools only rush in. Angels fear to tread. The aftermath of divorce is more cruel and will drive to a depression of no return. The mind needs only a second to think about the dangers of break. Remarriage is no way in a period where first marriage itself is not happening. When so many eligible are single and longing to hold the hand of a partner, those who are married should consider themselves as highly privileged and blessed. Remember always to GIVE ONE’S HEART TO FAMILY AND HEAD TO WORK AND OUTSIDERS. If one tries to do the reverse, there will be problems in marital life. Then marital life will become martial life. One can earn money anytime in life but to earn a good and affectionate partner and be bestowed with lovely children is a boon. Not all get this. So if one gets, there cannot be a better wealth in life.

கூட்டை உடைப்பது சுலபம். கூட்டை காப்பது கஷ்டம். இறையாண்மை, மனித நேயம், சகிப்புத் தன்மை, மன உறுதி இருந்தால் இரும்பையும் வளைக்க முடியும். கொரோனாவையே பார்த்த நாம் குடும்பத்தை கூறு போட அனுமதிக்கலாமோ?

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே.

dr s jagannath / July 2020 / feedback to drjagannaths@gmail.com

WHAT WE FAIL TO DO IN MARRIAGE?

Marriage is a partnership of relationship where the couple share the love, affection, problems, hurdles and disappointments equally. As long as the transaction of marital life is within the couple only, the bondage will never warrant a bandage. When outsiders (parents, siblings, friends, colleagues and neighbors) creep in, misunderstanding starts.

How many couples remember the wordings or the importance of sapthapadi? The importance of sapthapadi is forgotten with the passage of time. In marriage, the wordings should be written by hand individually by the couple, read loudly like oath taking in their mother tongue and signed. The couple should be made to understand that this is the magna carta of life. On every wedding anniversary, the magna carta should be read by both the parties as a reminder of their duty to the sacred relationship. The magna carta should be framed and hung in a prominent place in their living place. It would be worthwhile and beneficial to give a copy each to the in-laws so that they also remember their commitment towards the couple and think twice before disturbing the couple. It would do well for the couple to at least touch it everyday and say, “Thank you God for this wonderful relationship. I enjoy every bit of it and remember my commitment to take the relationship for ever, no matter how things work” . Doing so has a magic effect. It will help in reducing divorce. Divorce is a momentary decision for a mounting distress. Couple think more often than not that divorce is the panacea to problem not realizing the fact that it is only a foolish jump into the fire. Pre-divorce is an issue with one (spouse) but post divorce is with many. Insane thoughts and inability to control the mind results in divorce. How many couples have realized or visualized life after divorce? Remaining unmarried in life is far better and superior to commuting the crime of divorce. Divorce is cheating and breaking the sacred promise given to fire God (agni). It is a sin and the effect of it will be carried for births after births, meaning the individual will never be blessed with marital bliss by Agni. The sin will be mounting and aggregate to a deeper level when divorce happens after procreation. The child is made an innocent victim of parent’s inability to think of the problems the child may face in life. For Hindus, Brahma is the creator and Vishnu is the protector. The curse of Brahma and Vishnu will additionally befall apart from curse of Agni on the couple.

Nothing is difficult to control and change except ‘change’. We all live in a prison and the key is in our pocket. We forget the key and fail to liberate ourselves from problems of life. Liberation does not mean breaking the sacred bond.

sapthapadi: The groom and the bride walking seven steps before the holy fire in Hindu Marriage, chanting promises with every step, which form the very essence of marital life.

Magna Carta: A charter / a confirmatory document written and signed which forms the prescriptions for practice.

Agni: Fire in sanskrit language – The fire God of Hindus

dr s jagannath / July 2020 / feedback to drjagannaths@gmail.com